பப்பாளியின் பயன்கள்
இயற்கையின் கொடையான பப்பாளி பழத்தில் ஏராளமான நன்மைகள் உள்ளன. வீடு, தோட்டம் என பல்வேறு இடங்களில் சர்வசாதாரணமாக நாம் பார்க்கக் கூடிய மரங்களில் ஒன்று பப்பாளி மரம். மருத்துவ குணங்கள் நிறைந்த பழம் பப்பாளியில், வைட்டமின் ஏ, சி ஷ்மற்றும் இ ஆகியவை உள்ளன.
பப்பாளி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்கும். நார்சத்து மிக்கது. செரிமானத்துக்கு நல்லது. உடலுக்கு புத்துணர்வை தரும் பப்பாளி, தோலில் ஏற்படும் குறைபாடுகளை களையவல்லது.
இதனால் உடல் பொலிவு பெறும். கண் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது பப்பாளி. இதயம் தொடர்பான பிரச்னைகள், கேன்சர் வராமல் தடுக்கிறது. இதுபோன்று பல்வேறு நன்மைகளை தரும் பப்பாளி பழம், மற்ற பழங்களை விட விலையும் குறைவு.
எளிதாகவும் கிடைக்க கூடியது. எனவே, பப்பாளி பழத்தை நாமும் சாப்பிட்டு பயன்பெறலாமே. பப்பாளி பழத்தை காயாகவோ, அதிமாக பழுத்த பின்னரோ சாப்பிடுவதை விட, சரியான பதத்தில் உள்ள பழத்தை சாப்பிடுவதே சிறந்தது.
பரோட்டா சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும்?
கொத்து, வீச்சு, சில்லி, ஆலு, கைமா, நெய், முட்டை... தமிழகத்தில் ரவுடி களை விட அதிக அடைமொழிகள் பரோட்டாக்களுக்குத்தான் உண்டு. இழை இழையாகப் பிரிந்து வரும் நேர்த்தியோ, அல்லது குருமாவுடன் கூட்டணி சேரும் பக்குவமோ... ஏதோ ஒன்றால் இது சாப்பாட்டுப் பிரியர்களைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறது. விசிறி அடித்துத் தேய்க்கிறபோதே எச்சில் ஊற வைக்கிற இந்த பரோட்டாக்கள் சர்க்கரை நோய்க்குக் காரணமாகிறது என்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று!
‘பரோட்டா என்ன அத்தனை ஆபத்தான உணவா?’ என்றால், கொஞ்சம் தயங்கினாலும் பின்பு ஆமோதிக்கவே செய்கிறார்கள் நிபுணர்கள். ‘‘பொதுவாவே நார்ச்சத்து இல்லாத எந்த உணவுப் பொருளும் உடம்புக்கு நல்லதில்ல. உணவுல இருக்கற நார்ச்சத்துதான் அதைச் சரியான நேரத்துல செரிக்கச் செய்யுது. செரிமானம் கரெக்டா நடந்தாதான் உடம்புக்கு எல்லா சத்துகளும் முறையா கிடைக்கும். உடலின் இயக்கமும் இயல்பா இருக்கும். கோதுமையில இருந்து நார்ச்சத்தையெல்லாம் பிரிச்ச பிறகு கிடைக்கற மைதாவுலதான் பரோட்டா தயாரிக்கப்படுது. ஆக, பரோட்டா சாப்பிட்டா செரிக்க லேட் ஆகும்ங்கிறது நிஜம். அதனால அடிக்கடி பரோட்டா சாப்பிடறதைக் கூடுமானவரை தவிர்க்கலாம்!’’ என்றார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணர் ஷைனி சந்திரன்.
‘செரிமானப் பிரச்னை இருக்கட்டும். நேரடியாகவே சர்க்கரை நோய்க்கு பரோட்டாக்கள் காரணமாகுதுங்கிறதை மக்கள் புரிஞ்சுக்கணும்’ என்று பரோட்டாவைப் புரட்டிப் போட்டிருப்பது ‘கேரளா கிளப் ஆஃப் நியூட்ரிஷனிஸ்ட்’ என்கிற அமைப்பு. ஆய்வு முடிவில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் சொல்லியிருப்பது இதுதான்...
‘‘மையாக அரைக்கப்பட்ட கோதுமையில், கடைசியாக மிஞ்சுவது பழுப்பு கலந்த மஞ்சள் நிற மாவு. இந்த மாவுடன் பென்சாயில் பெராக்ஸைடு என்னும் வேதிப்பொருள் சேர்க்கும்போது அது பளிச்சென வெள்ளை நிறமாகிறது. தொடர்ந்து ‘அலெக்ஸான்’ என்னும் இன்னொரு வேதிப்பொருள் கலந்து மாவை மிருதுவாக்க, அது மைதாவாகிறது. மேற்சொன்ன இரண்டு வேதிப்பொருட்களுமே நேரடியாக சர்க்கரை நோயை வரவழைக்கக் கூடியவை. பென்சாயில் பெராக்ஸைடு ‘ஹேர் டை’யில் பயன்படுத்தப்படுகிற ரசாயனப் பொருள். மாவிலுள்ள புரோட்டீனுடன் சேர்ந்து இதை எடுத்துக் கொள்ளும்போது உடலில் இன்சுலின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. ‘அலெக்ஸான்’ என்பது இன்னும் மோசம். சர்க்கரை நோய் தொடர்பான ஆராய்ச்சிகளில், சோதனைக் கூடத்தில் எலிகளுக்கு சர்க்கரை நோயை வரவழைக்கக் கொடுக்கப்படுபவை இவை!’’
இந்த எச்சரிக்கை கண்ட மறுநாள் முதலே கேரளாவில் பரோட்டா குறித்த விழிப்புணர்வுப் பிரசாரத்தைத் தொடங்கி விட்டன சில நுகர்வோர் நல அமைப்புகள். தமிழ்நாட்டில் இந்த விஷயம் அவ்வளவாகத் தெரியவில்லை. சென்னையின் பிரபல நீரிழிவு மருத்துவர் விஜய் விஸ்வநாதனிடம் இது குறித்துப் பேசினோம்.
‘‘சர்க்கரை நோய் வர்றதுக்கு முன்னாலயும் பின்னாலயும் முக்கிய காரணியா இருக்கறது உணவுப் பழக்கம்தான். சரிவிகித உணவை எடுத்துக்கறது ஒண்ணுதான் இதுல இருந்து தப்பிக்க ஒரே வழி. சிலர், ‘இதுதான் பிடிக்கும்’னு குறிப்பிட்ட ஒரு உணவுப் பதார்த்தத்தைச் சாப்பிட்டே பழக்கப்பட்டுடறாங்க. அதுதான் தப்பு. ஒரே பொருளை திரும்பத் திரும்ப சாப்பிடறப்ப, அதுல அதிகமா இருக்குற சத்துக்கள் மட்டுமே உடல்லயும் அதிகமாச் சேருது. எல்லாப் பிரச்னைகளும் அங்க இருந்தே தொடங்குது.
எல்லா உணவுப் பொருட்களுமே சில பல வேதி நிகழ்வுகளைக் கடந்துதான் தயாராகுது. மைதாவுல கலக்கப்படுற பொருட்கள் பத்தி உறுதியா தெரியாம அதைப் பத்தி நாம கருத்து சொல்ல முடியாது. ஆனா, சில வேதிப்பொருட்கள் உடல்ல சேர்றப்ப ரத்தத்துல சர்க்கரையோட அளவு பாதிக்கப்படுதுங்கறது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டதுதான். தவிர, பரோட்டாவுல ஆயில், கலோரி அதிகமா இருக்கறதால உடல் வெயிட் போடறதையும் தடுக்க முடியாது. அதுவே சர்க்கரை நோய்க்குக் காரணமாவும் அமையலாம்’’ என்றார் விஸ்வநாதன்.
மத்தியான பரோட்டாக் கடை ஒன்றில் மாவு பிசைந்து கொண்டிருந்த மாஸ்டர் ஒருவரிடம் இதையெல்லாம் நாம் விளக்கிச் சொல்ல, ‘‘இது ஒழைப்பாளிங்க சாப்புடுறது சார். ஒடம்புக்கு ஒண்ணும் வராது. ரெண்டு பரோட்டா சாப்பிட்டுப் பாருங்க... அப்புறம் பேசுங்க’’ என்று நம்மை ஆஃப் செய்தார்.
மைதா தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் பேசியபோது, ‘‘மைதா மாவு என்னமோ முந்தா நேத்து வந்து இறங்கின மாதிரி பேசுறீங்க... பிரிட்டிஷ் காலத்துல இருந்து இதுலதான் கேக், பிஸ்கட் செய்யிறாங்க. சும்மா எதையாச்சும் கிளப்புறவங் களைப் பத்தியெல்லாம் நாங்க கவலைப்படலை’’ என்று முடித்துக் கொண்டார்கள். இப்படி அசால்ட்டா நம்மால இருக்க முடியலையே! - அய்யனார் ராஜன்
வீட்டு பரோட்டா ஓகே!
‘‘பரோட்டா மட்டுமில்லை... விரும்புகிற எந்த உணவையும் சாப்பிடலாம். ஆனால் அளவும் சுகாதாரமும்தான் முக்கியம்’’ என்கிறார் எம்.வி. நீரிழிவு மருத்துவமனையின் உணவியல் மருத்துவர் ஷீலா பால். ‘‘பரோட்டா சாப்பிட்டாலே சுகர் வந்திடும்னு நினைக்க வேண்டியதில்ல. அடிக்கடி, அளவுக்கதிகமா எடுத்துக்கறப்பதான் அப்படி ஆகும். எப்பவாவது சாப்பிடறதுக்கு பயப்பட வேண்டியதில்ல. ஆனா ஓட்டல்கள்ல சாப்பிடறப்ப மசாலா, எண்ணெய் அதிகமா இருக்க வாய்ப்பிருக்கு. அதனால வீட்டுலயே பண்ணிச் சாப்பிடறது நல்லது. ஆனா, கண்டிப்பா ராத்திரி வேளையில வேண்டாம்’’ என்கிறார் அவர்.
குடல் புண்ணை குணமாக்கும் மாதுளை
மாதுளையில் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு ஆகிய மூன்று ரகங்கள் உள்ளன. இனிப்பு மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் இதயத்திற்கும், மூளைக்கும் மிகுதியான சக்தி கிடைக்கிறது. பித்தத்தைப் போக்குகிறது இருமலை நிறுத்துகிறது.
புளிப்பு மாதுளையைப் பயன்படுத்தினால் வயிற்றுக் கடுப்பு நீங்குகிறது. இரத்த பேதிக்குச் சிறந்த மருந்தாகிறது. தடைபட்ட சிறுநீரை வெளியேற்றுகிறது. பித்தநோய்களை நிவர்த்தி செய்கிறது. குடற்புண்களை ஆற்றுகிறது. எந்த வகையான குடல் புண்ணையும் குணமாக்குகிறது. மாதுளம் விதைகளைச் சாப்பிட்டால் இரத்தவிருத்தி ஏற்படும். சீதபேதிக்குச் சிறந்த நிவாரணம் அளிக்கும்.
தொடர்ந்து நோயின் பாதிப்பால் பலகீனம் அடைந்தவர்கள் மாதுளம் பழத்தைச் சாப்பிட்டால் உடல் தேறும், உடல் எடை கூடும். தொண்டை, மார்பு, நுரையீரல், குடலுக்கு அதிகமான வலிமையை உண்டாக்குகிறது. ஆண் தன்மையில் பலகீனம் உள்ளவர்கள் மாதுளம்பழம் சாப்பிடுவதால் மிகுந்த சக்தியை அடைய முடிகிறது.
மாதுளம்பழத்தைச் சாப்பிட்டால் விக்கல் உடனே நிற்கும், அதிக தாகத்தைப் போக்கும். மாதுளம் பழச்சாற்றில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் உடல் சூட்டு நோய்கள் நீங்கும். சரீரம் குளிர்ச்சியடையும். காய்ச்சல் தணியும். மாதுளம் பழச்சாற்றில் தேன் கலந்து காலை ஆகாரத்துக்குப் பின் தினமும் சாப்பிட்டால், ஒரு மாத உபயோகத்தில் உடல் ஆரோக்கியமும் தெம்பும் உண்டாகும். புதிய இரத்தம் உற்பத்தியாகிவிடும். மாதுளம் பூக்களை உலர்த்திப் பொடித்து வைத்துக் கொண்டு வேளைக்கு ஒரு சிட்டிகை வீதம் சாப்பிட்டால், இருமல் நிற்கும்.
மாதுளம் பூச்சாறு, அருகம்புல் சாறு சமமாகச் சேர்த்து வேளைக்கு 30 மில்லி வீதம் தினசரி மூன்று வேளையாக மூன்று தினங்களுக்குக் கொடுத்தால் பெண்களுக்கு ஏற்படும் உதிரப்போக்கு நிவர்த்தியாகும். மாதுளம் பூச்சாற்றை 15 மில்லியளவு சேகரித்து சிறிது கற்கண்டு சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இரத்த மூலம் நீங்கும். மூலக் கடுப்பும், உடல் சூடும் தணியும். வாந்தி, மயக்கத்திற்குக் கொடுத்தால் நோய் தீரும்.
மாதுளம் பூக்கள் 15 கிராம் எடுத்து 25 கிராம் சீனி சேர்த்து மசிய அரைத்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு வந்தால், தொல்லைப் படுத்தும் பெண்களின்
நான் கொசு
நான் ஈ ஹீரோவாக இருந்து வில்லனை தூங்க விடாமல் படாய்படுத்துவதை சினிமாவில் பார்த்திருக்கிறோம். இப்போது, அந்த படத்தின் வில்லன் நிலைமையிலதான் மக்களும் இருக்கிறார்கள். கொஞ்சம் வித்தியாசம்... நமக்கு தொல்லை தருவது ஈ கிடையாது... கொசு. சுட்டெரிக்கும் வெயில் தணிஞ்சு இப்ப தான் 2 வாரமா ஒரு சில நாட்களில் மழை லேசா பெஞ்சு வருது.
இதுக்கே எல்லா ஊர்களிலும் கொசுத் தொல்லை பயங்கரமா விஸ்வரூபம் எடுத்து விட்டது. 65 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் பரவி விட்டது. மலேரியாவால் பலர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். தி.நகர், மடிப்பாக்கம் போன்ற பகுதிகளில் வரலாறு காணாத அளவில் கொசுக்கள் பெருகிவிட்டன. கொசுக்களால் ஒருபக்கம் நோய் பரவி வருகிறது. மறுபக்கம் நிம்மதியான தூக்கத்தை தொலைத்து அவஸ்தையும் பட வேண்டியிருக்கிறது.
இரவு 7 மணியில் இருந்தே அனைத்து பகுதிகளிலும் கொசுக்கள் தங்கள் வேட்டையை ஆரம்பித்து விடுகின்றன. இதனால், பெரிதும் பாதிக்கப்படுவது குழந்தைகளும் முதியவர்களும்தான். மடிப்பாக்கம் ராம் நகரை சேர்ந்த சிவசுநாதன் கூறுகையில், ‘எங்கள் ஏரியாவில் நிறைய காலி மனைகள் உள்ளன. லேசான மழை பெய்தாலும் கூட இதில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
தேங்கிய மழைநீரால் கொசுக்கள் பெருகி, எங்களால் தூங்கவே முடியவில்லை. குழந்தைகள் தூங்கமில்லாமல் பெரிதும் சிரமப்படுகிறார்கள்’ என்றார்.
சாலிகிராமத்தை எடுத்துக் கொண்டால், அங்கு மலேரியா வேகமாக பரவி வருகிறதாம். மயிலாப்பூர், மந்தைவெளி, அடையார், தரமணி போன்ற பகுதிகளில் கால்வாயை ஒட்டிய இடங்களில் நடந்து கூட செல்ல முடியவில்லை.
அந்தளவுக்கு கொசுக்கள் மொய்த்துக் கொண்டிருக்கின்றன. வீட்டில் என்னதான் கொசுவர்த்தி, விலையுயர்ந்த லிக்விட், கொசுவலை வாங்கி வைத்தாலும் முழு பயன் இல்லை. எப்படியோ கொசுக்கள் வீட்டில் நுழைந்து படாய்படுத்தி விடுகிறது. தென், மத்திய சென்னையிலேயே இந்த நிலை என்றால் வடசென்னையை பற்றி கேட்கவா வேண்டும். இதனால் டெங்கு பரவுகிறது.
டெங்கு அறிகுறி
இப்போது சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கி வருவது டெங்கு காய்ச்சல்தான். பொதுவாக டெங்கு காய்ச்சல் என்பது ஏடிஸ கொசுவால்தான் ஏற்படும். இது பகலில் கடிக்கக் கூடியது. வழக்கமாக கொசுக்கள் தேங்கி கிடக்கும் கழிவுநீரில் இருந்து உற்பத்தி ஆகும். ஏடிஸ் கொசு தேங்கி இருக்கும் நல்ல தண்ணீரில் இருந்து உற்பத்தியாகும். இதனால், வீட்டில் பாத்திரங்களில் உள்ள தண்ணீரை எப்போதுமே மூடியே வைக்க வேண்டும்.
இவை பெரும்பாலும் வீட்டிற்குள்ளும் வீட்டை சுற்றியும் அதிகமாக வலம் வரும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்த நபர்களையோ, குழந்தைகளையோ இந்த கொசுக்கள் கடித்தால் உடனடியாக அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் வரும். ஏடிஎஸ் கொசு கடித்தால் முதலில் காய்ச்சல் வரும். உடல் வலியுடன் எலும்புகளிலும் வலி ஏற்படும். இப்படி ஏதாவது உடல் வலிகள் தொடங்கும் பட்சத்தில் அது டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி.
உடனடியாக மருத்துவமனையில் உரிய சிகிச்சை எடுத்துக் கொண்டால் டெங்குவில் இருந்து விடுபடலாம். ஆனால், போதிய சிகிச்சை இல்லை என்றால் உயிரிழக்கும் அபாயமும் உண்டு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாழைப்பழத்தை கண்டுக்காததால் இழப்பு எவ்வளவு என உங்களுக்கு தெரியுமா
சீப்பான பொருட்களுக்கு எப்பவுமே மவுசு கம்மிதான். அதே கதைதான் வாழைப்பழத்துக்கும். வெறும் 2 ரூபாய்தானே என நாம் நினைக்கும் வாழைப்பழத்துக்குள்ளேயும் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு.
நாட்டின் மொத்த வாழைப்பழ உற்பத்தியில் 25 சதவீதம் தமிழகத்தின் பங்கு உள்ளது. இந்தளவிற்கு உற்பத்தி இருந்தாலும் நமக்கு பெரியதாக பயன் ஒன்றும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். காரணம்... வாழைப்பழங்கள் மிக குறுகிய நாட்களில் பழுத்துவிடும் என்பதும், அதற்குமேல் அதை
பாதுகாத்து மீண்டும் உபயோகப்படுத்தும் அளவிற்கு தேவையான குளிர்சாதன வசதிகள் ஏதும் இல்லாததுதான்.
இதையே முறையான குளிரூட்டல் மூலம் வாழைப்பழத்தை பாதுகாத்து ஏற்றுமதி செய்தால், மாநிலத்தின் மொத்த வருமானம் ஆண்டுக்கு ரூ.6000
கோடி கிடைக்க வாய்ப்புள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன. இதுபோன்று காய்கறி மற்றும் பழங்களை பாதுகாக்கும் வசதி இல்லாததால் மார்கெட்டுக்கு விற்பனைக்காக வருவதற்கு முன்பே அழுகி விடுகின்றன.
ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சின்ன லிஸ்ட்... நீர்ச்சத்து 61.4 கிராம், சர்க்கரை 36.4கி, புரதம் 13கி, தாதுப்பொருள் 0.7 மி.கிராம், கால்சியம் 17 மி.கி, இரும்பு 0.04 மைக்ரோ கிராம், மக்னீசியம் 41 மைக்ரோ கிராம், பாஸ்பரஸ் 36 மி.கி, சோடியம் 366 கி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் பி1, கலோரி 124.